டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஹைகேட்டைச் சேர்ந்த ரியான் முல்ஹெர்ன், 41, வெள்ளிக்கிழமை Snaresbrook கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து வன்புணர்வு மற்றும் வன்புணர்வு முயற்சிக்காக எட்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் அழுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, கடந்த மார்ச் மாதம் ஹரிங்கேயில் உள்ள ஒரு தெருவுக்கு பொலிஸார் சென்றிருந்தனர்.
அங்கு 25 வயதான பாதிக்கப்பட்ட பெண், டேட்டிங் செயலி மூலம் முல்ஹெர்னைச் சந்தித்த பிறகு அவரது வீட்டிற்குச் சென்றதாக அதிகாரிகளிடம் கூறினார்.
தான் வேண்டாம் என கெஞ்சிய நிலையிலும் பலாத்காரம் செய்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிடிருந்தன.
“சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் முல்ஹெர்னைக் கைது செய்தல், குற்றம் சாட்டுதல் மற்றும் சிறையில் அடைப்பதைப் பார்ப்பது, இந்த கொடூரமான குற்றங்களுக்கு நீதியைப் பெறுவதில் எங்கள் குழுக்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை காட்டுகிறது.” என
விசாரணைக்கு தலைமை தாங்கிய அதிகாரி சாம் லாக்ஸ்டோன் கூறினார்.