அதிகரித்துள்ள நட்பு நிலை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சீனாவுடன் நட்பை பேணி வந்த அமேரிக்கா தற்போது இந்தியாவுடனும் நட்பு நிலையை உணடாக்கியுள்ளதாக கூறுவது ஏன் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியா அமெரிக்கா நட்பு மிகவும் உறுதியானது வலுவானது, நெருக்கமானது என்றும், முன்பு எப்போதையும் விட இப்போது புதிதான மாற்றத்தை கொண்டுள்ளது என்றும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நம் இருநாடுகளின் நட்புறவு நிலையானது, உலகின் நன்மைக்கானது என்றும் இந்த பூமி உருண்டையை இன்னும் வாழத்தக்கதாக மாற்றும் என்றும் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.