தாய்லாந்து, பாங்காக்கில் உள்ள டான் மியுயங் விமான நிலையத்தில் நகரும் நடைபாதை முடிவடையும் இடத்தில் போட்டிருந்த தட்டுகள் திடீரென உடைந்தன.
இதில் தனது பயணப்பொதியுடன் வந்த 57 வயதான தாய்லாந்து பெண் பயணியின் இடது கால் சிக்கிக்கொண்டது.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த ஊழியர்கள் அவரது காலை எடுக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இறுதியாக மருத்துவ குழு வந்து, வேறு வழியில்லாததால், முழங்காலுக்கு கீழே அப்பெண்ணின் இடது காலை வெட்டி பெண்ணை மீட்டனர்.
அந்தப் பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு வெட்டப்பட்ட காலை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதனால், வசதியுள்ள வேறு வைத்தியசாலையில் முயன்று பார்க்குமாறு அப்பெண் கேட்டுக்கொண்டார்.
அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் விமான நிலைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்று விமான நிலைய இயக்குனர் காருண் தணகுல்ஜீராபத் கூறினார்.
மேலும், இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் பேசத்தயாராக இருப்பதாக கூறினார்.