அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இனி மாணவர்களின் இனத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஹார்வர்ட் (Harvard), North Carolina ஆகிய பல்கலைகளில் “affirmative action” எனும் கொள்கையின் கீழ் இனத்தின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்ப்பதை உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
பாகுபாட்டை அதிகம் சந்திக்கும் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகள் “Affirmative action” என்று அழைக்கப்படுகின்றன.
இது கொள்கை நல்ல எண்ணத்துடன் வகுக்கப்பட்ட போதும் அதை நிரந்தரமாகச் செயல்படுத்தமுடியாது என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் (John Roberts) தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஒருவர் கறுப்பினத்தவரா, வெள்ளை இனத்தவரா என்ற அடிப்படையில் பல்கலைகளில் சேர்ப்பதும் பாகுபாட்டுக்கு இணையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“மாணவர்கள் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் சேர்க்கப்படவேண்டும். ஒட்டுமொத்த இன அடிப்படையில் இல்லை,” என்று ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியா (California), வாஷிங்டன், மிச்சிகன் (Michigan) உள்ளிட்ட 9 மாநிலங்களில் அத்தகைய போக்கிற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.