அரங்கங்களுக்குச் சென்று கால்பந்தாட்டங்களைக் காண ஈரான் பெண்கள் அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருவதாக அந்நாட்டுக் கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் வருகையை அனுமதிக்கக்கூடிய சில அரங்கங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முடிவை ஈரான் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆதரித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
2022ஆண்டு மார்ச் மாதம் லெபனானுக்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தைக் காண நுழைவுச்சீட்டு வாங்கியிருந்த ஈரான் பெண் ஒருவர் அரங்கத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இதனால் அங்கு ஆர்ப்பாட்டம் வெடித்தது.
ஆனால், இவ்வாண்டு ஈரான் பெண்கள் தங்களது தேசிய அணிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புமுறைக் கால்பந்தாட்டத்தை அரங்கில் காண அனுமதிக்கப்படவுள்ளனர்.