புகைப்படத் தொகுப்பு

Home உலகம்  பசிபிக் பெருங்கடலில் ஒக்டோபஸ்களின் இனப்பெருக்க பகுதி

 பசிபிக் பெருங்கடலில் ஒக்டோபஸ்களின் இனப்பெருக்க பகுதி

0 minutes read

சர்வதேச ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலில் இதுவரை யாரும் கண்டிராத  ஒக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஒக்டோபஸ்களின் இனப்பெருக்க இடத்தை பசிபிக் பெருங்கடலின் கோஸ்டாரிகா கடல் பகுதியில் 3 வாரங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஆராய்ச்சியாளர்கள், கடலின் மேற்பரப்பலிருந்து 2 மைல் ஆழத்தில்  கண்டுபிடித்துள்ளனர்.

2013-ம் ஆண்டு இதே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போது, தாய் ஒக்டோபஸ்கள் தங்கள் முட்டைகளை பாதுகாக்க இங்கு கூடியதை பார்த்ததாகவும், ஆனால் இந்த அளவுக்கு இப்பகுதியில் இனப்பெருக்கும் நடைபெறும் என்று நினைக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் குளிர்ச்சியான இடங்களிலேயே ஒக்டோபஸ்கள் இனப்பெருக்கம் செய்யும் என்றும், ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம், சற்று வெப்பமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More