பெரு உபினஸ் எரிமலை சீற்றத்தால் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட எரிமலையை கொண்ட நாடு பெரு அதில் இந்த எரிமலை கடந்த 2019 ஜூலை மாத நடுபகுதியில் இதே நிலையில் காணப்பட்டது.
எரிமலை அருகில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இது ஒரு உயிருள்ள எரிமலையாக பார்க்கப்படுகிறது ஏன் என்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெடித்து சிதறுகிறது.
எரிவளையம் என அழைக்கப்படும் பசுபிக் மகா சமுத்திரத்தின் விளிம்பு பகுதியில் அமையப்பெற்றுள்ளது.
மொசி குவா பகுதியில் அமைந்துள்ள உபினஸ் எரிமலை 2023 ஜூன் முதலே சாம்பலை காக்க ஆரம்பித்துவிட்டது.
எனினும் இப்போது இதன் சீற்றம் அதிகரித்து உள்ளத்துடன் எரிமலை சார் பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. என பெரு நாட்டின் புவி இயற்பியல் ஆராச்சி மையம் கூறியுள்ளது .