இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு
சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழு ஆண்டுகளில் ஒப்பிடும்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும் உயர்ந்திருப்பதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளன.
சம்பள உயர்வு இல்லாமல் இருக்கையில், அதிகரிக்கும் வீட்டு வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர் என ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, இங்கிலாந்தில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை அடைந்துள்ளது.
வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.