குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்காலத்தில் சிறிய பங்கேவுள்ளதாகவும், மனித நாகரிகம் எதிர்கொள்ளும் அபாயங்களில் மிகப்பெரிய அபாயம் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது என்றும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் ஜப்பான் எனும் நாடும் இல்லாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தையில்லாத பெற்றோருக்கு வாக்குரிமையை மட்டுப்படுத்தா விடில் ஜனநாயகம் நீண்டகாலம் செயற்பட முடியாது என்ற டுவிட்டர் பயனர் ஒருவரின் கருத்தையும் எலான் மஸ்க் ஆமோதித்துள்ளார்.
பிறப்பு விகிதம் வீழ்ச்சி அபாயம் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய அவர், “சிலர் குறைவான குழந்தைகளைப் பெற்றால் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைப்பது முட்டாள் தானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாறாக மனிதர்களின் எண்ணிக்கையை இரட்டித்தாலும் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்றும் குறைந்தபட்சம் தற்போது இருக்கும் மனித எண்ணிக்கையையாவது பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.