பாகிஸ்தான், லர்கானா பகுதியை சேர்ந்த அமீர் அலி – குதேஜா தம்பதி. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.
இவர்கள், 9 பேருக்குமே பிறந்த திகதி ஒரே நாளாகும். அதாவது ஓகஸ்ட் 1ஆம் திகதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.
இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்தச் சாதனையை வைத்திருந்தனர். அவர்கள், பிப்ரவரி 20ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1ஆம் திகதி என்பது கூடுதல் சிறப்பாகும். இவர்கள் 1991ஆம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்துகொண்டனர்.
மறுவருடம் ஆம் திகதி 1ஆம் திகதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார். அடுத்தடுத்த குழந்தைகளின் பிறப்பும் ஓகஸ்ட் 1ஆம் திகதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதி தெரிவித்துள்ளனர்.