கனடாவின் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், நேற்று முதல் (12) தனது வட்டி வீதத்தை 5 சதவீதமாக கனேடிய வங்கி (Bank of Canada) உயர்த்தியுள்ளதாக அவ் வங்கியின் ஆளுநர் டிஃப் மக்லம் அறிவித்துள்ளார்.
வங்கியின் ஜூலை மாத நிதிக்கொள்கை அறிக்கையின் படி, உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு சுமார் 2.8% ஆகவும், 2024 இல் 2.4% ஆகவும், 2025 இல் 2.7% ஆகவும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கனடாவில் நிலவிய பொருளாதார தளம்பல்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும் விலைப் பட்டியல்களில் ஸ்திரத்தன்மையையும் பேணும் முகமாகவும் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கனேடிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.