இங்கிலாந்து – வேல்ஸ் நாட்டிலுள்ள Barry எனும் இடத்தில் அமைந்துள்ள வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார், அவ்வீட்டில் இருந்து 65 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 200,000 பவுண்டுகள் என வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வீட்டிலிருந்து 9,000 பவுண்டுகள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவ்வீட்டிலிருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக வேல்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.