இந்தியாவில் 26 எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
குறித்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு INDIA – “அனைவரையும் உள்ளடக்கிய இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி” (Indian National Developmental Inclusive Alliance) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அந்தக் கூட்டணி களமிறங்கவுள்ளது.
26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் கூடி புதிய கூட்டணியின் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஜனநாயகத்தைக் காக்கக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடியதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே (Mallikarjun Kharge) தெரிவித்துள்ளார்.
அடுத்த கூட்டம், மும்பையில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 38 கட்சிகளின் தலைவர்களும் நேற்று (18 ) புதுடில்லியில் சந்தித்துப் பேசினர்.
சுயநல அரசியலுக்காக எதிர்த்தரப்புக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் JP நட்டா சாடியுள்ளார்.