செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்; மணிப்பூரில் கொடூரம்

வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்; மணிப்பூரில் கொடூரம்

1 minutes read

இந்தியா – மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற பேரணியின்போது வெடித்த வன்முறை இன்னும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், பழங்குடியின இளம் பெண்கள் இருவரை, கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி நடு வீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்களை, வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என பழங்குடியின அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவம், கடந்த மே மாதம் 4ஆம் திகதி கங்போக்பி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது.

3ஆம் திகதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அது தொடர்பான தாக்குதலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி பொலிஸாருக்கு முதலமைசர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மிரிதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் ”குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More