ஈரானில் ஒரு நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது ஈரான் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஈரான் சீர் திருத்தவாதிகள் தமது அரசியல் தேவைக்காக அடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் அரசு ஹிஜாப் எனும் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணிந்த காரணத்துக்காக அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு சிறைத்தண்டனை விதித்து மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.