இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியை சந்தித்து பேசியுள்ளார்.
அத்துடன், உத்தியோகபூர்வ இந்தியா விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு, டெல்லியில் இன்று (21) காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.