ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
அதன்படி, ரஷ்யாவில் உள்ள 35 நிறுவனங்கள், அவுஸ்திரேலியா திடீர் பொருளாதார தடையை விதித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் முன்னாள் துணை பிரதமர்கள் ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரசில் உள்ள இராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனி நபர்களுக்கும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.