உணவு விலை அதிகரிப்பால் உலகில் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கருங்கடல் வழியே தானியங்களைக் கொண்டுசெல்ல உதவும் உடன்பாட்டிலிருந்து ரஷ்யா அண்மையில் பின்வாங்கியது அதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா திங்கட்கிழமைமுதல் (24 ) உக்ரேனின் தானியக் கிடங்குகளை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது. அது சர்வதேச மனிதநேயச் சட்டத்தை மீறும் செயல் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டித்தது.
உலகெங்கும் தானியங்களைக் கொண்டுசெல்லும் கருங்கடல் துறைமுக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அந்த உடன்பாட்டின் மூலம் சுமார் 33 மில்லியன் டன் வேளாண் பொருள்கள் அனைத்துலகச் சந்தைகளுக்குச் சென்றன.
ஆனால் அதிலிருந்து ரஷ்யா விலகியதுமுதல் தானியங்களின் விலை ஏற்றங்கண்டுள்ளதாக ஐக்கிய நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விளம்பரம்
உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் உடன்பாட்டின் விதிமுறைகளை மதிக்கவில்லை என்று ரஷ்யா கூறியது. இருப்பினும் உடன்பாட்டில் மீண்டும் இணைவதுபற்றி பரிசீலிக்கப்போவதாய் ரஷ்யா கூறியுள்ளது.