அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பின மக்கள் மீது தாக்குதல்கள் சிறுது சிறிதாக நடக்கின்றது என்பதற்கான உதாரணமாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது அமெரிக்காவின் காவலர் ஒருவர் பொலீஸ் நாயை ஏவி கடிக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 4-ஆம் தேதி, ஒஹையோ மாநில தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற கண்டெய்னர் லொரியின் பின் சக்கரத்தில் மட்- ஃபிளாப் (mud flap) பொருத்தப்படாமல் இருப்பதை கவனித்த காவலர் ஒருவர் லொரியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அவரை கவனித்த பிறகும் பொருட்படுத்தாமல் சென்ற லொரி ஓட்டுனரை ஏராளமான பொலீசார் வெகுதூரம் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் லொரியை நிறுத்திவிட்டு இரு கைகளையும் தூக்கியபடி லொரியை ஓட்டிவந்த கருப்பின இளைஞர் சரணடைந்தார்.
கைகளை உயர்த்தி விட்டதால் நாயை அவிழ்த்து விட வேண்டாம் என சக காவலர்கள் கூறிவதை பொருட்படுத்தாமல் காவலர் ஒருவர் போலீஸ் நாயை லொரி ஓட்டுநர் மீது ஏவினார். அது அவரை கீழே தள்ளி கடித்து குதறியது.
லொரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாயை ஏவிய காவலர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.