பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சீன் ஆற்றில் நீந்த விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
அழுக்கடைந்த நீர் காரணமாக சுமார் 100 ஆண்டுகளாக அங்கு நீந்துவதற்கு தடை அமுலில் இருந்தது.
இந்நிலையில், தற்போது 1.6 பில்லியன் டொலர் செலவில் சீன் ஆறு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
சுத்திகரிப்புப் பணிகளின் கடைசிக் கட்டம் முழுமூச்சாக நடைபெறுகிறது.
இதனையடுத்து, அடுத்த ஆண்டு பாரிஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சில, சீன் ஆற்றில் இடம்பெறும் என்றும் BBC குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்குள் சீன் ஆற்றின் 3 பகுதிகள் பொதுமக்கள் நீந்துவதற்காக அனுமதிக்கப்படவுள்ளது.
சீன் ஆற்றில் கழிவுநீர் கலந்தமையால், அதில் நீந்துவதற்கு 1923ஆம் ஆண்டு அதிகாரிகள் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.