இங்கிலாந்தில் அதிகாரித்து வரும் வெப்ப நிலை காரணமாக வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் புதுவித முயற்சியில் இறங்கியுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
அதாவது, எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை ‘Big Butterfly Count‘ எனும் வண்ணத்துப்பூச்சிகளைக் கணக்கெடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், உள்ளூர்த் திறந்தவெளிகளிலும் பூங்காக்களிலும் 15 நிமிடம் அமர்ந்து அங்கு வருகைதரும் வண்ணத்துப்பூச்சிகளை எண்ண வேண்டும்.
கண்ணில் படும் வண்ணத்துப்பூச்சியின் இனத்தை அடையாளங்கண்டு, அதனையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு 64,000 பேர் பங்கேற்றனர். அப்போது 96,257 அந்துப்பூச்சிகளும் (Moths) வண்ணத்துப்பூச்சிகளும் அப்போது கணக்கெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.