உலகெங்கும் வெப்ப காலநிலை அனைவரையும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கும் சூழலில் அவுஸ்திரேலியாவில் உள்ள செயின்ஸ் கடற்கரையில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கி உள்ளன.
அல்பானி நகருக்கு கிழக்கே 60 km தொலைவில் உள்ள கடலில் (26.07.2023) அன்று கூட்டமாக நீந்தி வந்த திமிங்கலங்கள், கரைக்கு அருகில் உள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அவற்றை காப்பாற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்ட நிலையில், நேற்றிரவு 51 திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருடன் இருக்கும் 46 திமிங்கலங்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.