அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரியும் மேகனும் எடுத்துள்ள தீர்மானம், அந்நாட்டு மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாகி உள்ளது.
பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்கள் மற்றுமொரு இடத்துக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாங்கள் புதிதாக செல்லும் இடத்தில் வாழும் மக்கள் தங்களை வரவேற்பார்கள் என ஹரியும் மேகனும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும், Hope Ranch பகுதியில் ரியல் எஸ்டேட் நடத்தும் ஒருவர், ஹரியும் மேகனும் அங்கு வருவது குறித்து மக்கள் கவலையுடன் விசாரிப்பதாக கூறியுள்ளார்.
ஹரியும் மேகனும் அங்கு குடிவருவதால், தங்கள் காவலர்களையும் அழைத்துவருவார்கள் என்றும், அதனால் அந்த பகுதியின் அமைதி பாதிக்கப்பட்டு கவனம் ஈர்க்கும் இடமாக அது ஆகிவிடும் என்றும் மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.