சீனாவிலிருந்து புகலிடம் தேடி தைவான் வந்த சீனாவாசியொருவருக்கு ஏற்பட்ட சோதனை.
சீனாவில் அதிக கட்டுப்பாடு காரணமாக இவ்வாறு மக்கள் தைவானை புகலிடமாக கொள்ள இடம் பெயர்வது அங்கெ வழமையாக நடைபெற்று வரும் ஒன்றாக காணப்படுகிறது. அதே போன்று தான் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த நபர் குளவியிடம் சிக்கி நன்றாக மாட்டிக்கொண்டார்.
இதே போல் 2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர்.
2020ல் 7 மணி நேரம் நீந்தியே தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறே இந்த நபர் புஜியான் மாகாணத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு 40 வயது கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை கையோடு எடுத்து சென்றிருக்கிறார்.
பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதியில் நுழைந்துள்ளார்.ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதனால் மட்சு தீவுகளில் சுற்றுலா பயணிகளிடம் உதவி கோரினார். சுற்றுலா பயணிகள் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு இவரை குறித்து தகவல் தெரிவித்தனர்.
வசமாக தைவான் அரசிடம் சிக்கி கொண்டார்.