அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் மக்களுக்காக அமைக்கப்பட்ட குளிரூட்டும் மையங்கள் உருவாகியுள்ளது.
தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பலர் நோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள். வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.