சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொக்சூரி சூறாவளி நாட்டின் உள்நோக்கி நகர்ந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தியஞ்சின், ஹிபே, ஷண்டொங் வட்டாரங்களுக்கும் கனத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வடக்கிலிருந்து பலத்த காற்று வீசுவதாகச் சீனத் தேசிய வானிலை ஆய்வகம் கூறுகிறது.
அடுத்த சில நாள்களில் பீஜிங்கில் மிதமானது முதல் கனத்த மழை அபாயம் நீடிக்கும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன், அதிக அபாயமுள்ள இடங்களில் வசிப்போர் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், பொதுப் போக்குவரத்துத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டொக்சூரி சூறாவளியால் கனத்த மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், வடக்கு வட்டாரங்களில் வெள்ளமும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.