இங்கிலாந்து இளவரசர் வில்லியம், சுற்றுச்சூழலுக்கு உகந்த burgerகளை சாப்பிடுமாறு அறிவுரை வழங்கினார்.
“Earthshot Burgers” எனும் burgerகளை, “Sorted Food” எனும் YouTube பக்கத்துடன் இணைந்து மக்களுக்கு இளவரசர் வழங்கினார்.
லண்டனின் தெற்குப் பகுதியில் உணவு வாகனத்திலிருந்து பசியுடன் இருந்த பொதுமக்களுக்கு குறித்த பர்கர்களை அவர் வழங்கினார்.
இது குறித்த வீயோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு Earthshot பரிசை வென்றவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார்.
முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர் Earthshot பரிசை இளவரசர் அறிமுகப்படுத்தினார்.
burgerகள் வைக்கப்படும் பெட்டியிலிருந்து அவற்றைச் சமைக்கப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்கள், அடுப்பு, அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று இளவரசர் தெரிவித்துள்ளார்.
“சுவை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உணவின் தரம் கண்டிப்பாகச் சிறந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.