இங்கிலாந்தின் இளவரசர் ஹேரி (Prince Harry) இம்மாதம் நடைபெறவிருக்கும் Polo கிண்ணப் போட்டியில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்குப் பயணிக்கவுள்ளார்.
அதன் மூலம் தாம் ஆரம்பித்த Sentebale அற நிறுவனத்திற்கு நிதித் திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்தப் போட்டி, சிங்கப்பூர் Polo Clubஇல் ஓகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறும்.
போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி தென்னாப்பிரிக்காவில் HIV கிருமியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு உதவும்.
“குழந்தைகளும் இளையர்களும் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு Sentebale அற நிறுவனம் உதவி புரியும். அதற்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் Polo கிண்ணப் போட்டி துணைபுரியும்,” என இளவரசர் ஹேரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹேரியும் லெசோத்தோவின் இளவரசர் சீய்சோவும் (Seeiso) அந்த அற நிறுவனத்தை 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்தனர்.