விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து வங்கி தொடர்ந்து போராடி வருவதால், வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக 14ஆவது முறையாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள், வங்கி அதன் அடிப்படை விகிதத்தை இன்று வியாழன் பிற்பகல் அதன் தற்போதைய 5% இலிருந்து 5.25% ஆக அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.
இங்கிலாந்தின் பணவீக்கம், விலைகள் உயரும் விகிதம், வழக்கத்தை விட அதிகமாக உள்ளதுடன், இது குடும்பங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இறுதியாக 5.25% வட்டி விதமானது, 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 2008 இல் இருந்தது.