பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் மரணித்துள்ளனர்.
இந்த விபத்தையடுத்து சுமார் 60 குடியேற்றவாசிகளை, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கப்பல்கள் மீட்டிருக்கின்றன.
படகுடன் கடலில் மூழ்கி காணாமல் போன இருவரைத் தேடும் பணி கைவிடப்பட்டதாகப் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காப்பாற்றப்பட்டோர் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
குடியேற்றவாசிகளின் படகுகள் பல, ஒன்றையொன்று ஒரே நேரத்தில் கடக்க முயற்சித்துள்ளமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், பிரான்ஸுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான அந்தக் கடற்பகுதி உலகிலேயே ஆக பரபரப்பான கடல்வழி. அங்கு அலைக் கொந்தளிப்பு கடுமையாக இருக்கும். சிறு படகுகளைக் கொண்டு அந்தப் பகுதியைக் கடப்பது அபாயகரமானது எனக் கூறப்பட்டது.
படகில் நிறைய பேர் இருந்ததாகத் தொண்டூழியர் ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சிறிய படகுகளில் அடைக்கலம் தேடிவருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க அண்மைக் காலமாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் அரசாங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது.
மூலம் – Reuters