கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய் தீவில் காட்டுத்தீ ஏற்பட்டது.
காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் நகரக்குள் பரவியது.
இதனால் 90-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். Powered By PauseUnmute Loaded: 1.11% Fullscreen இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதம் அடைந்துள்ளது.
ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நானும் எனது மனைவியும் (ஜில் பைடன்) ஹவாய் செல்ல இருக்கிறோம். அங்கு செல்லும் நாங்கள் மவுய் காட்டுத்தீ குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.