கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர்.
அவர்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
நேற்று தலிபான்கள், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய 2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.