கலிபோர்னியாவில் பூகம்பத்துடனான சூறாவளி ஒரே நேரத்தில் தாக்கியுள்ளன, ஹிலாரி சூறாவளி தாக்கத்தொடங்குவதற்கு சற்று முன்னர் கலிபோர்னியாவை பூகம்பம் தாக்கியுள்ளது.
கலிபோர்னியாவை பூகம்பம் ( 5.1) தாக்கியுள்ளது நகரில் அதனை உணரமுடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ளது – மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரித்துள்ளனர்.
மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.