அவுஸ்திரேலிய மக்களை எச்சரித்து வரும் அரசு மிகவும் ஆபத்தான காட்டுதீ ஏற்பட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
2019 – 20 கறுப்புகோடை கால காட்டுதீயின் பின்னர் மிகவும் ஆபத்தான காட்டுதீயை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழமைக்கு மாறான வெப்பநிலைகாரணமாக அவுஸ்திரேலியாவின் பெருமளவு பகுதிகள் காட்டுதீயினால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகின்றது என அவுஸ்திரலேசிய தீ அதிகாரபேரவை தெரிவித்துள்ளது.
குறைவடைந்துள்ள மழைவீழ்ச்சி காலநிலை மாற்றங்கள் போன்றவையும் இவற்றுக்கு காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்து நியுசவுத்வேல்ஸ் விக்டோரியா தென்அவுஸ்திரேலியா நோர்தேன் டெரிடட்டரி ஆகியன பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.