வியட்நாம், குவாங் நின் (Quang Ninh) பகுதியில் உள்ள ஹா லோங் பேயில் (Ha Long Bay) உள்ள பிரபல “முத்தமிடும் கற்கள்” விழுந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த இரு கற்களும் பார்ப்பதற்கு முத்தமிடுவது அல்லது தொடுவது போல் தெரியும்.
2019ஆம் ஆண்டு அங்கு 4 மில்லியன் சுற்றுப்பயணிகள் சென்றிருந்தனர் என்று BBC அறிக்கையிட்டுள்ளது.
உயரும் கடலின் நீர்மட்டம், மிக அருகில் பயணம் செய்யும் மீன்பிடிப் படகுகள் ஆகியவற்றால் இரு கற்களும் அரிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்படாத சுற்றுப்பயண நடவடிக்கைகள் ஆகியவற்றால் அவை இன்னும் வேகமாக அரிக்கப்படுவதாக BBC அறிக்கையிட்டுள்ளது.
கற்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அவை விரைவில் விழுந்துவிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.