விமானவிபத்து காரணமாக் ரஷ்யாவின் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டார். ரஷ்ய கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலில் பாரிய சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் விமானம் தரையைநோக்கி செல்வதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எம்பிரேயர் லெகசி 600 என்ற தனியார் விமானம் ரஸ்யாவின் வெர் பிராந்தியத்தின் குஜென்கினோ கிராமத்திற்கு அருகில் விழுந்து நொருங்கியது.மொஸ்கோவிலிருந்து செயின்பீட்டர்ஸ்பேர்க்கினை நோக்கி பத்துபேருடன் சென்றுகொண்டிருக்கையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.- விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரிகோஜினிற்கு என்ன நடந்தது என கிரெம்ளினோ அல்லது ரஸ்ய பாதுகாப்பு தரப்போ இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எனினும் வாக்னர் கூலிப்படைக்கு சொந்தமான கிரேஜோன் என்ற டெலிகிராம் ஒன்று பிரிகோஜின் விமானவிபத்தில் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளது.