ரஷ்யாவின் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது .
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவாக வேக்னர் குழு போராடியிருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் இவர்களுக்கு இடையிலான தொடர்பில் விரிசல் ஏற்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன் ரஷ்யாவில் தனியார் விமானமொன்று மொஸ்கோ நகரிலிருந்து Saint Petersburg நோக்கி பயணித்த போது வீ ழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் வேக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் என்பவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டன .
தற்போது யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஷ்யா உறுதி செய்துள்ளது.
பத்து உடல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளள அவைவிமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரங்களோடு ஒத்துப்போகின்றன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.மூலக்கூறு மரபியல் சோதனைகள் இடம்பெற்றன,அதனடிப்படையில் உயிரிழந்த பத்துபேரினதும் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது.
விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.