இங்கிலாந்து, லிவர்பூலில் வெள்ளம் சூழ்ந்த வீதியில் காரை ஓட்டிச் சென்ற தம்பதி மரணித்துள்ளனர்.
இந்த விபத்து, Queens Drive பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 21:00 இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் காரில் சிக்கிக் கொண்ட தம்பதியர் பிலிப் மற்றும் எலைன் மார்கோ ஆகியோருக்கு உதவ அவ்வழியால் பயணித்தோர் மிகப் போராடியுள்ளனர்.
அவசர மீட்பு பணியாளர்கள், தம்பதியரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது.
Queens Drive பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் காட்டுவதுடன், குறித்த தம்பதி பயணித்த கார் ஒரு பாலத்தின் கீழ் மூழ்குவதையும் காட்டுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 32 மிமீ (1.25 அங்குலம்) அளவுக்கு அதிகமான கனமழை, சம்பவ இடத்திற்கு அருகாமையில் பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், “மூடப்படும் வீதிகளில் பயணிப்பதை தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.