இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மாதரத்துக்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
சமூக வலை தளமான எக்ஸ்-ல் சில பதிவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.