செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் புதிய குழி | நாசா

சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் புதிய குழி | நாசா

0 minutes read

நாசா நிறு­வனம் சந்­தி­ரனின் மேற்­ப­ரப்பில் புதிய குழி ஒன்று காணப்­ப­டு­வதை  அவ­தா­னித்­துள்­ளது.

நாசா  ரஷ்­யாவின் லூனா -25 விண்­கலம் மோதி­யதால் இக்­குழி ஏற்­பட்­டி­ருக்­கலாம் என தெரி­வித்­துள்­ளது.

சந்­தி­ரனின் தென் துரு­வத்தில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக லூனா 25 எனும் விண்­க­லத்தை கடந்த மாதம் ரஷ்யா அனுப்­பி­யி­ருந்­தது. எனினும் அக்­கலம் கடந்த 19 ஆம் திகதி சந்­தி­ரனில் வீழ்ந்து நொருங்­கி­யது.

இந்­நி­லையில், அவ்­விண்­கலம் வீழ்ந்த இடத்­துக்கு அருகில் புதிய சிறிய குழி ஒன்று காணப்படுவதாக அமெ­ரிக்­காவின் நாசா தெரி­வித்­துள்­ளது.

சுந்­தி­ரனை வலம்வரும் தனது விண்­கலம் ஒன்றின் மூலம், கடந்த வருடம் ஜூன் மாதமும் இவ்­வ­ருடம் ஆகஸ்ட் 24 ஆம்  திக­தியும் பிடிக்கப்­பட்ட படங்­களை ஒப்­பிட்­டதன் மூலம் இப்­பு­திய குழியை நாசா கண்­ட­றிந்­துள்­ளது. இதனால் ரஷ்­யாவின் லூனா 25 விண்­கலம் வீழ்ந்­த­மை­யா­லேயே இக்­குழி ஏற்­பட்­டி­ருக்­கலாம் என நாசா தெரி­வித்­துள்­ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More