உக்ரேனுக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரேனுக்கு இதுவரை, 43 பில்லியன் டொலருக்கும் மேல் மதிப்புள்ள உதவிகளை வழங்கியிருக்கிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் கீவ்க்கு நேரடியாகச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர், உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள முதல் அமெரிக்க உயரதிகாரி பிளிங்கன் ஆவார்.
இவர், நீண்டகாலப் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி அவர் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் கலந்துரையாடினார்.