இந்தியாவின் பசுமைப் புரட்சித் தந்தை என்று போற்றப்பட்ட வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 98ஆகும்.
நெடுநாள் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், சென்னையில் அவரின் இல்லத்தில் நேற்று (28) காலமானார்.
நாட்டில் பஞ்சத்தைக் குறைக்க உதவியவர்களில் சுவாமிநாதனும் ஒருவர். இந்தியாவைப் பெரும் கோதுமை உற்பத்தி நாடாக உருமாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் அவர்.
1960களில் இந்தியாவின் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. தேசிய அளவில் தானிய உற்பத்தி கணிசமாகக் குறைந்திருந்தது.
இறக்குமதியை நம்பியிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
கல்வி, அரசாங்கத் துறைகளில் உயர் பதவிகளை மறுத்து வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட்டசுவாமிநாதன் தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் இறங்கி, அவர் பசுமைப் புரட்சியைத் தொடங்கினார்.
சுவாமிநாதன், தொழில்நுட்பத்தைக் கொண்டு வேளாண்மைத் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கோதுமை உற்பத்தியை அதிகரிக்க உதவினார்.
15 ஆண்டுகளில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி மும்மடங்கானது.
1987ஆம் ஆண்டு உணவின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுபவர்களை அங்கீகரிக்கும் உலக உணவுப் பரிசு, சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதையும் அவருக்கு வழங்கி கௌரவித்தது இந்திய அரசாங்கம்.