நாம் வாழும் இந்த தொடர்பில் பால்லாயிரம் ஆண்டுகள் முன்னிருந்தே பலதரப்பட்ட ஆய்வுகள் , முடிவுகள் ஆராச்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ள நிலையில் தற்போது எட்டாவதா ஒன்பதாவதா என கணிக்க முடியாத வகையில் சீலாந்தியா கண்டம் என்ற பெயர் கொண்டு கண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. எனினும், ஒரு கண்டமே மறைந்திருப்பதாக புவியியலாளர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் அதன் வரைபடத்தை தற்போது உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்திற்கு கீழே ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வரை லெமுரியா கண்டம் இருந்ததாகக் கூட சொல்கின்றனர். ஆனால் அதை முழுவதும் உண்மை என்று நிரூபிக்க முடியவில்லை. அதே போல இப்போது எட்டாவது கூட ஒரு கண்டம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. உலகின் எட்டாவது கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் சுமார் 375 ஆண்டுகள் எடுத்தனர் என்ற செய்தி பரவி வருகிறது.
2017 ஆம் ஆண்டில், நியூசிலாந்தின் கரையோரத்தில் முன்னர் எப்போதும் அறியப்படாத ஒரு கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீலந்தியா அல்லது மாவோரி மொழியில் Te Riu-a-Māui என்று அதற்கு பெயரிடப்பட்டது.
Zealandia அல்லது Te Riu-a-Maui என பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டத்தை பற்றி இன்னும் பல விடயங்களைத் தேடி ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே சீலந்தியா கண்டம் கடலுக்கடியில் சென்றிருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
பசுபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அதை ஒரு கண்டம் என்று அழைக்க வேண்டுமா இல்லையா என்பதே அதில் பிரதானமான விவாதமாக இருக்கின்றன.
புதிய கண்டத்தின் 94% பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.
இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும் தெரிவித்துள்ளனர்.