ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தான் தற்போதைய பொருளாதார சூழலில் வெளியேற்றி வருகிறது.
பாகிஸ்தானின் இச்செயற்பாடு தாலிபான்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.
தாலிபான்களின் ஆட்சசியை எதிர்கொள்ள முடியாத பெருந்தொகையானோர் . பல அண்டை நாடுகளில் குடியேறி வந்தனர் . அவ்வாறு குடியேறியவர்களில் சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானவர் பாகிஸ்தானில் குடிபெயர்ந்தனர் .
இந்த சூழல் இப்படியே இருக்கும் போது பாகிஸ்தான் தற்போது ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் நவம்பர் 1 ஆம் திகதி பகிரங்கமாக வெளியேற்றப்படுவார்கள்.
இந்த அறிவித்தலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜீலானி கூறினார்.