இங்கிலாந்தில் மூளை அறுவைச் சிகிச்சைகளை மேலும் பாதுகாப்பாகத் திறம்பட நடத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) கைகொடுக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை, இலண்டன் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் அதனை அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை பயிலும் மருத்துவர்கள் வழக்கமாக நடத்தப்படும் மூளை அறுவைச் சிகிச்சை போன்ற பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவுகிறது.
மூளையின் மிகவும் மென்மையான, முக்கியமான அமைப்புகளைத் தெளிவாகப் பார்க்க அது துணைபுரிகிறது.
மூளையின் சரியான பகுதியை அணுகத் துணைபுரிவதோடு, ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் காட்டும் ஆற்றலையும் அந்த AI தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
மூத்த நிபுணர் ஒருவர் அருகிலிருந்து கற்றுக்கொடுப்பதைப் போன்ற உணர்வை அந்த அதி நவீனத் தொழில்நுட்பம் தற்போது தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.