இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவையும் (Benjamin Netanyahu) ஜனாதிபதி ஐசாக் ஹெர்சோகையும் (Isaac Herzog) ரிஷி சுனக் சந்திக்கவிருக்கிறார்.
2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர், பிற நாடுகளுக்கும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக இஸ்ரேலிலும் காஸாவிலும் ஏற்பட்ட மரணங்களுக்கு இங்கிலாந்து பிரதமர் சுனக் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் என இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பொருள்களை காஸாவுக்குள் கொண்டுசெல்வதற்கான பாதையைத் துரிதமாகத் திறப்பதற்கு ரிஷி சுனக் நெருக்கடி தரப்போவதாகவும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் சிக்கியிருக்கும் இங்கிலாந்து நாட்டினர் அங்கிருந்து வெளியேறுவதைப் பற்றியும் ரிஷி சுனக் ஆராயவுள்ளார்.