இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் 17 நாளாக தொடரும் நிலையில் இத்தனை நாட்கள் இருந்த வான்வெளி தாக்குதலை தொடர்ந்து இன்று தரைவழி தாக்குதலுக்கு தயாராகி உள்ள இஸ்ரேல்.
இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லையில் தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் தனது படைகளை வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளது.
ஆயினும் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் காசாவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.