கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா மீதான ஆகாய வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
அது ஹமாஸைக் களைவதற்கான முயற்சி என இஸ்ரேல் கூறுகிறது.
இதற்காக இஸ்ரேல் சுமார் 400க்கும் அதிகமான தாக்குதல்களை ஆகாயம் வழி நடத்தியிருக்கிறது.
தரைவழி தாக்குதலுக்கும் இராணுவம் தயாராக இருப்பதாய் இஸ்ரேல் இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர் தாக்குதல்கள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.