காஸாவின் மிகப் பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் போர்க் குற்றங்களாக இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாமை இரு நாள்களில் இரு முறை தாக்கியதாகப் பாலஸ்தீன வட்டாரத்தின் சுகாதார அமைச்சு கூறியது.
அதில் குறைந்தது 195 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்றும் குறைந்தது 777 பேர் காயமுற்றனர் என்றும் இடிபாடுகளில் சிக்கிய 120 பேரை இதுவரை காணவில்லை என்றும் ஹமாஸ் அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் குறிப்பிட்டது.
இஸ்ரேலின் தாக்குதலால் அகதிகள் முகாமில் பொதுமக்களில் அதிகமானோர் உயிரிழந்தமையையும் பொருட்சேதத்தையும் ஐ.நா மனித உரிமை அலுவலகம் சுட்டிக்காட்டியது.
முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் குழுவின் தளபதி இப்ராஹிம் பியாரி (Ibrahim Biari) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.