இறைச்சியை அதிகளவில் உண்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இறைச்சி சாப்பிடும் போக்கை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைக்க எச்சரிக்கை படங்கள் உதவக்கூடும் என்று Appetite சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இங்கிலாந்தில் Durham பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் இறைச்சி, மீன் மற்றும் சைவ உணவு வகைகளில் பல்வேறு எச்சரிக்கை படங்கள் பயன்படுத்தப்பட்டன.
சில படங்களில் ‘இதைச் சாப்பிடுவதால் உலகில் தொற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது…’ மற்றும் ‘இதைச் சாப்பிடுவதால் பருவநிலை மாற்றத்துக்கான உங்கள் பங்கு அதிகரிக்கிறது…’ போன்ற படங்களுடன் அறிவுறுத்தல்கள் பயன்படுத்தப்பட்டன.
எனினும், சில உணவுகளில் அவ்வாறு எதுவும் படங்கள் பதிக்கப்பவில்லை.
ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் எச்சரிக்கை இருந்த படங்களை விரும்பவில்லை.
இதனால் எச்சரிக்கை படங்கள், மக்களின் உணவுத் தெரிவுகளை மாற்ற உதவினால் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.